தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் துவங்கியது பயணிகள் ரயில் முன்பதிவு!
- மக்கள் திலகத்தின் மறுஉருவில் வருக…விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள் !
- பாதிப்பை விட குணமானோர் எண்ணிக்கை அதிகம்: தளர்களால் உயராத கொரோனா எண்ணிக்கை
- ’’ஐ லவ் யூ ஆல்...’’ மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு கடிதம் எழுதிய எஸ்.பி.பி
- காதலால் தற்கொலை செய்வதால் காதலை தடை செய்ய முடியுமா - ஹெச், ராஜா
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம்: இன்றைய விலை நிலவரம்!
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை தற்போது தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
கொரோனா காரணமாக உலகம் முழுவதிலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தங்கம் மீதான முதலீடு அதிகரிக்க தொடங்கியது. இதனால் வேகமாக விலை உயர்ந்த தங்கம் கடந்த மாதம் உச்சபட்சமாக 40 ஆயிரத்தை தாண்டியது.
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை கடந்த இரு நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று இதன் விலை கனிசமாக உயர்ந்துள்ளது.
ஆம், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.39,104க்கு விற்பனை ஆகிறது. அதேபோல கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.4,886க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.4,888க்கு விற்பனை ஆகிறது.
