திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (17:45 IST)

காதலால் தற்கொலை செய்வதால் காதலை தடை செய்ய முடியுமா - ஹெச், ராஜா

இந்தியாவில் கொரொனா பரவல் தாக்கம்  அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகள்,  பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் எப்போது தொடங்கும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள தனியார் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்  ஆன்லைன் வழியே மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் இதில் பல மாணவர்களால் பாடம் புரிந்துகொள்ளமுடியவில்லை, என்று மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகத் தகவல்கள் வெளியானது. பல்வேறு விமர்சனங்கள் வெளியானது.

இதுகுறித்து பாஜக தேசிய செயலர் ராஜா கூறியுள்ளதாவது: காதலால் தற்கொலை செய்வதால் காதலை தடை செய்ய முடியுமா என்று ஆன்லைன் வகுப்புகள் குறித்து அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக கட்சி டெல்லியில் மட்டுமல்ல தமிழகத்திலும் ராஜாதான் எனத் தெரிவித்துள்ளார்.