1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold price slowly fall down

மெல்ல மெல்ல குறையும் தங்கத்தின் விலை!

Tamilnadu
கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார ஏற்ற இறக்கங்களால் எகிறிய தங்கம் விலை தற்போது மெல்ல குறைந்து வருகிறது. 

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைந்து வருகிறது.
 
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.72 விலை குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.38,240-க்கு விற்பனையாகிறது. அதேபோல இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 9 குறைந்து  ரூ.4,780 விற்பனையாகிறது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
தேர்தலில் தனித்து போட்டி... சிங்கிள் சிங்கமாய் கர்சித்த சீமான்!!