வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 26 செப்டம்பர் 2020 (08:04 IST)

சென்னை தோல்விக்கு என்ன காரணம்??

சென்னை அணி நேற்று டெல்லியுடனான மோதலில் தோல்வி அடைந்துள்ளது. 
 
நேற்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மோதியது. ஏற்கனவே ஒரு வெற்றி தோல்வியுடன் அடிபட்ட சிங்கமாய் பதுங்கியுள்ள சென்னை டெல்லி அணியைத் தோற்கடிக்குமா இல்லை டெல்லி சென்னையைத் தோற்கடிக்குமா என ஒரே பரபரப்பு நேற்றைய போட்டியில் தொற்றிக்கொண்டது.
 
ஆனால் பரபரப்பு எல்லாம் வீணாய் போனது. ஆம், சென்னை அணி 131 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்த நிலையில் சென்னை அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ். முதலில் பேட் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்து, சென்னை அணிக்கு 176 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
 
சென்னை அணியின் தொடக்க வீரர் டுபிளசிஸ் நன்றாக விளையாடியபோது, அவுட் ஆகவே அணி ஸ்கோர் எடுக்காமல் தள்ளாடியது. தோனி தன் பங்குக்கு விளாசினாலும் வெற்றிக்குத் தேவையான ரன்கள் எடுக்க முடியவில்லை. அதனால் 20 ஓவர்கள் முடிவில், 131 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்த நிலையில் சென்னை அணி வீழ்ந்தது. 
 
அனுபவம் நிறைந்த சென்னை அணி ஆமை போன்ற ஆட்டத்தால் தோல்வியை தழுவியது. முரளி விஜய், வாட்ஸன், கெய்க்வாக் மற்றும் கேதர் ஜாதவின் பேட்டிங் சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.