திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By SInoj
Last Updated : வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (23:25 IST)

ஐபிஎல்-2020 ;கோட்டைவிட்ட சென்னை அணி... பட்டாசு கிளப்பிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி !

ஐபிஎல் திருவிழா என்றைக்கும் இல்லாத வகையில் அதிரடி திரிலிங்லிங், சஸ்பென்ஸ் ஆச்சர்யம் எனப் பலதரப்பட்ட வகையில் ரசிகர்களை ஈர்த்த்துள்ளது.

சென்னை அணி சிங்ஸ் அணி  இன்று டெல்லி  கேபிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது.
ஏற்கனவே ஒரு வெற்றி தோல்வியுடன் அடிபட்ட சிங்கமாய் பதுங்கியுள்ள சென்னை டெல்லி அணியைத் தோற்கடிக்குமா இல்லை டெல்லி சென்னையைத் தோற்கடிக்குமா என ஒரே பரபரப்புத் தொற்றிக் கொண்டுள்ளது.

தற்போது விளையாடி வரும் இரு அணிவீரர்களும் இந்தியாவின் மாபெரும் பாடகர்  எஸ்.பி.பி மற்றும் ஜேடி ஜோன்ஸ் ஆகிய இருவரின்  மறைவை யொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும்  விதமாக உடையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்து, சென்னை அணிக்கு 176 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

டெல்லி அணியில் முதலில் களமிறங்கிய பிரித்வி ஷா, ஷிகர் தவான் நல்ல தொடக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 94 ரன்கள் எடுத்தனர்.  ஷிகர் தவான் 35 ரன்கள் எடுத்தார். எனவே 20 ஓவர் முடிவில் டெல்லின் அணி 175  ரன்கள் எடுத்தது.

இதையடுத்து விளையாடிய சென்னை அணியின் தொடக்க வீரர் டுபிளசிஸ் நன்றாக விளையாடியபோது, அவுட் ஆகவே அணி ஸ்கோர் எடுக்காமல் தள்ளாடியது. தோனி தன் பங்குக்கு விளாசினாலும் வெற்றிக்குத் தேவையான ரன்கள் எடுக்கத் திணறியது. அதனால் 20 ஓவர்கள் முடிவில், 131 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்த நிலையில் சென்னை  அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்.