பேனரால் ரசிகர் உயிரிழந்தால் சினிமாவை தடை செய்யலாமா? சூர்யாவுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி!
நீட் தேர்வு அச்சம் காரணமாக தேர்வுக்கு முந்தைய நாள் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அரசியல்வாதிகள் பலர் நீட் தேர்வுக்கு எதிராக காரசாரமான அறிக்கைகளை விட்டனர். இருப்பினும் மத்திய மாநில அரசுகள் நீட் தேர்வை வெற்றிகரமாக நடத்தி முடித்த்விட்டது.
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக நடிக சூர்யா நேற்று இரவு ஒரு காரசாரமான அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பெரும்பாலான நெட்டிசன்கள் இந்த அறிக்கைக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜகவினர் மட்டும் இந்த அறிக்கை குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக பிரபலமும் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் இதுகுறித்து கூறியதாவது:
நடிகர்களை கொண்டாட ரசிகர்கள் பேனர் வைக்கின்றனர். முதல் நாள் முதல் காட்சியின் போது ரசிகர்கள் பேனர் வைக்கும் போது ஒரு சில ரசிகர்கள் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். ரசிகர்கள் உயிர் இழந்துள்ளனர் என்பதால் திரைப்படங்களை தடை செய்யலாமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்
மேலும் சூர்யா அவர்கள் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களை படிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும் என்றும் அச்சமின்றி தேர்வை எதிர்கொள்ள அவர் தைரியமான வார்த்தைகளை கூற வேண்டும் என்றும் கூறியுள்ள காயத்ரி ரகுராம், மருத்துவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்வது ஒரு பரிட்சை போன்றது தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்