1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. From today MBC (V) section add in engineering application,

பொறியியல் கல்லூரி விண்ணப்பத்தில் MBC (V) பிரிவு சேர்ப்பு!

MBC (V)
தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பம் நேற்று முதல் தொடங்கி உள்ள நிலையில் நேற்று இரவு திடீரென தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. இந்த அரசாணையின் படி பொறியியல் படிப்புகளுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது 
 
இதனை அடுத்து இன்று முதல் பொறியியல் கல்லூரி விண்ணப்பத்தில் இந்த அரசாணைக்கு ஏற்ப புதிய பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் MBC (V) என்ற புதிய பிரிவு இன்று முதல் சேர்க்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு பொறியியல் கல்லூரிகளில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த சமூகத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக இந்த ஆண்டு வன்னியர் சமூகத்தினர் மிக அதிக அளவில் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
சீமான் செல்போனும் ஒட்டுக்கேட்பா? திடுக்கிடும் தகவல்