கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: விறகு அடுப்புக்கு மாறும் ஓட்டல்கள்..!
தமிழகத்தில் நிலவி வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, உணவக உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம், ஹோட்டல் தொழிலை முடக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.
இதன் காரணமாக, பல சிறிய மற்றும் நடுத்தர உணவக உரிமையாளர்கள் மாற்று ஏற்பாடாக விறகு அடுப்புகளுக்கு மாறி வருகின்றனர். சிலிண்டர் விநியோகம் சீராக இல்லாததால், குறித்த நேரத்தில் உணவை தயார் செய்ய முடியாமல் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என அவர்கள் அஞ்சுகின்றனர். இதனால், ஹோட்டல்களின் ஒரு பகுதியில் மீண்டும் பழைய காலத்தை போல விறகு அடுப்புகளை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இருப்பினும், விறகு அடுப்புகளை பயன்படுத்துவதில் சுற்றுச்சூழல் மற்றும் இட நெருக்கடி போன்ற சிக்கல்கள் இருப்பதாக சில உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். அரசு தலையிட்டு சிலிண்டர் விநியோகத்தை சீர்செய்ய வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. தட்டுப்பாடு நீடித்தால், உணவுகளின் விலை உயரவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Edited by Siva