1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. alliance parties are shocked by dmk decision

கம்மியான சீட்தான் கொடுப்போம்!.. கூட்டணி கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த திமுக!..

mk stalin
2021 சட்டமன்ற தேர்தலின்போது 13 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்ட திமுக இந்த முறை 26 கட்சியுடன் மெகா கூட்டணி அமைத்திருக்கிறது. கடந்த முறை திமுக 173 தொகுதிகளில் போட்டுயிட்டது. அதேபோல், திமுகவுடன் கூட்டணை அமைத்த பல கட்சிகள் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டது..

இந்த முறை திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையம் உள்ளிட்ட பல புதிய கட்சிகள் இணைந்திருக்கிறது. எனவே கடந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்த தொகுதிகளையும் விட குறைவான தொகுதிகளையே இந்த முறை ஒதுக்குவோம் என திமுக தலைமை சொல்லியிருப்பது கூட்டணி கட்சிகளுக்கு கட்சிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறதாம்
.
காங்கிரஸ் மட்டும் எப்படியோ 28 தொகுதிகளை வாங்கிக் கொண்டது.. கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டுயிட்ட மதிமுகவுக்கு இந்த முறை 4 தொகுதிகள் தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைக் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் அதிகமான தொகுதிகளை கேட்டு திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என திமுக கைவிரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. விடுதலை சிறுத்தைக்கு கடந்த தேர்தலை போலவே 6 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளும், மக்கள் நீதி மையத்துக்கு 2 தொகுதிகளும் ஒதுக்க திமுக முன்வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதுவும் கமலின் மக்கள் நீதி மையத்தை நீங்கள் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுங்கள் என ஸ்டாலின் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
அரசு பேருந்து மோதி 4 பேர் பலி!.. சேலம் அருகே அதிர்ச்சி...