1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

கல்லூரி பேருந்து மீது ரயில் மோதி விபத்து.. கரூர் அருகே பயங்கரம்.. உடனடியாக விரைந்த செந்தில் பாலாஜி..!

train
கரூர் அருகே வீரராக்கியம் மற்றும் பாளையம் இடையே உள்ள தனியார் ரயில்வே பாதையில், தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். 
 
இந்த விபத்து நேற்று மாலை ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது நிகழ்ந்தது. இந்த ரயில்வே பாதை செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், இது தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
 
விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மொத்தம் 25 மாணவர்கள் காயமடைந்ததாகவும், அதில் இருவர் தனியார் மருத்துவமனைக்கும் மற்றவர்கள் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவித்தார். 
 
ஒரு மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், முதலுதவிக்கு பிறகு மூன்று மாணவர்கள் வீடு திரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆளில்லா ரயில்வே கடப்புகளில் நிலவும் பாதுகாப்பு குறைபாடே இந்த விபத்திற்கு காரணமாக கருதப்படுகிறது.
 
Edited by Siva