ஞாயிறு, 19 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 6 மார்ச் 2026 (10:45 IST)

திமுக எம்.எல்.ஏ ஆகிறாரா ஓபிஎஸ் மகன்? 3 தொகுதிகளுக்கு விருப்பமனு தாக்கல்..!

திமுக எம்.எல்.ஏ ஆகிறாரா ஓபிஎஸ் மகன்? 3 தொகுதிகளுக்கு விருப்பமனு தாக்கல்..!
தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பமாக, முன்னாள் எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். 
 
கம்பம், போடி மற்றும் ஆண்டிப்பட்டி ஆகிய மூன்று தொகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் போட்டியிட வேண்டும் என அவர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
 
மேலும், தனது தந்தை ஓ.பன்னீர்செல்வத்திற்காக போடி தொகுதியிலும், தனக்காக ஆண்டிப்பட்டி மற்றும் போடி தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 
 
ஓபிஎஸ் சமீபத்தில் திமுகவில் இணைந்த நிலையில், ரவீந்திரநாத்தின் இந்த விருப்ப மனு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் தேனி மாவட்ட தொகுதிகளில் திமுகவின் பலத்தை அதிகரிக்க இந்த நகர்வு உதவும் என கருதப்படுகிறது. 
 
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு இது வித்திடலாம்.
 
 
Edited by Siva