தொடர்புடைய செய்திகள்
- தவெக அரசுக்கு எதிராக அதிமுக, திமுக இணைந்து போராட்டம்.. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பு...!
- மாற்று கட்சியினரை முதல்வர் விஜய் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை: கார்த்தி சிதம்பரம்
- தவெகவுடன் கூட்டணி!.. பக்கா பிளான் போடும் என்.ஆர்.ரங்கசாமி!.. நடப்பது என்ன?..
- பனையூர் கேட் எப்போது திறக்கும் என்று ஏங்கி பார்த்து கொண்டு நிற்கிறார்கள்: கேபி முனுசாமி கண்டனம்...
- குதிரை பேரம் குறித்து விசாரிக்க அதிகாரம் இருந்தால் ஆளுனர் விசாரிக்க வேண்டும்: திருமாவளவன்
சபாநாயகரைச் சந்திக்கும் முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள்: பின்னணி என்ன?
அதிமுகவை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் சமீபத்தில் தங்கள் பதவிகளை திடீரென ராஜினாமா செய்த நிலையில், தற்போது அவர்கள் வரிசையாக சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்து வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தாராபுரம் சத்யபாமா சபாநாயகரை சந்திக்க வருகை தந்துள்ள சூழலில், இன்று பெருந்துறை தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஜெயக்குமார் சபாநாயகரை நேரில் சந்தித்து பேசினார். தான் எதனால் பதவியை ராஜினாமா செய்தேன் என்பது குறித்த விரிவான விளக்கத்தையும் அவர் சபாநாயகரிடம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தபோது அவர்கள் அளித்த கடிதமும், விளக்கமும் முழுமையாகவோ அல்லது போதுமானதாகவோ இல்லை என்று சபாநாயகர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், விதிமுறைகளின்படி சபாநாயகரே நேரடியாக விளக்கம் கேட்டு அழைப்பு விடுத்ததன் பேரில் இந்தச் சந்திப்புகள் நடந்து வருகின்றன.
ஜெயக்குமாரைத் தொடர்ந்து, அடுத்தடுத்து ராஜினாமா செய்த பிற முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களும் சபாநாயகரைச் சந்தித்து தங்களின் விளக்கத்தை முறைப்படி அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திடீர் நகர்வுகள் அடுத்தகட்ட அரசியல் மாற்றத்திற்கான அறிகுறியா என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.
Edited by Siva
