தொடர்புடைய செய்திகள்
- கோர்ட்டில் கேஸ் போட்ட திமுக!.. விஜய் கரூருக்கு போக முடியுமா?.. இன்னைக்கு தெரியும்..
- தத்துவம் இல்லாத அரசியல்!.. உங்களை கொன்னு கூட அவன் ஜெயிப்பான்!.. இளவரசு யாரை சொல்றாரு!..
- தவெகவுடன் கூட்டணி!.. பக்கா பிளான் போடும் என்.ஆர்.ரங்கசாமி!.. நடப்பது என்ன?..
- திமுகவில் இணைய ரூ.500 கோடி பேரம்: ஆடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு தவெக எம்எல்ஏ அதிரடி புகார்!
- சினிமாவை காப்பாத்த நடிக்க வாங்க அஜித்!.. மன்சூர் அலிகான் கோரிக்கை!...
மாற்று கட்சியினரை முதல்வர் விஜய் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை: கார்த்தி சிதம்பரம்
தமிழக அரசியல் களத்தில் புதிதாக உருவெடுத்துள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடு மற்றும் அதன் எதிர்காலம் குறித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளன. செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு புதிய நபர்களை சேர்க்க வேண்டிய அவசியம் தற்சமயம் இல்லை என்றும், குறிப்பாக மாற்று கட்சிகளில் இருந்து வருபவர்களை உள்வாங்க வேண்டிய தேவை எழவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
விஜய் ஏற்கனவே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு தலைவர் என்பதால், அவரது கட்சியின் சின்னமும் தற்போது தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகிவிட்டது என்று கார்த்தி சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தமிழகத்தில் தவெக அமைத்துள்ள இந்த அரசை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு யாராலும் அசைக்க முடியாது என்பதால், அவர்கள் எவ்வித பயமும் இன்றி தைரியமாக இருக்கலாம் என்றும், மக்களுக்கு ஒரு நிலையான, சிறப்பான ஆட்சியை வழங்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இருந்து தவெக-விற்குள் வரும் முக்கியப் புள்ளிகளால், அக்கட்சியின் ஆரம்பகாலத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் ஒருவித அதிருப்தி நிலவி வருவதாகக் கூறப்படும் வேளையில், கார்த்தி சிதம்பரத்தின் இந்த வெளிப்படையான பேட்டி அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
Edited by Siva
