1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. flight ticket price increase for diwali

சென்னை.. மதுரை.. திருச்சி.. அதிரடியாக உயர்ந்த விமான கட்டணம்! - பொதுமக்கள் அதிர்ச்சி

indigo
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் வந்துவிட்டாலே விமான கட்டணங்ளை விமான நிறுவனங்கள் 2 மடங்கு உயர்த்திவிடுகின்றனர். தமிழகத்தில் சேலம், மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சென்னை, கோவை ஆகிய 5 இடங்களில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.

வருகிற 8ம் தேதி தீபாவளை பண்டிகை வரும் நிலையில் விமான கட்டணங்கள் உயர்ந்துவிட்டது. சென்னையிலிருந்து மதுரைக்கு வழக்கமான கட்டணம் ரூ.4730-ஆக இருந்த நிலையில் நவம்பர் 5ம் தேதி ரூ.16,700-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல், நவம்பர் 6ம் தேதி ரூ.12,600 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னையிலிருந்து திருச்சிக்கு வழக்கமான கட்டணம் ரூ.4640-ஆக இருந்த நிலையில் நவம்பர் 5ம் தேதி ரூ.14,607 எனவும், நவ.6ம் தேதி ரூ.7233 எனவும் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னையிலிருந்து கோவைக்கு வழக்கமான கட்டணம் ரூ.4180-ஆக இருந்த நிலையில் நவம்பர் 5ம் தேதி ரூ.14,607 எனவும், நவ.6ம் தேதி ரூ.7233 எனவும் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வழக்கமான கட்டணம் ரூ.5780-ஆக இருந்த நிலையில் நவம்பர் 5ம் தேதி ரூ.17,053 எனவும், நவ.6ம் தேதி ரூ.17,100 எனவும் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னையிலிருந்து சேலத்திற்கு வழக்கமான கட்டணம் ரூ.3030-ஆக இருந்த நிலையில் நவ.6ம் தேதி ரூ.12,506 என டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
கௌதம் மேனன் இயக்கத்தில் முதல்வர் விஜய் - விஜய் ரசிகர்கள் செம ஹேப்பி