1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Five districts schools holiday today due to rain

கனமழை எதிரொலி: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

கனமழை
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருவதை அடுத்து ஐந்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை மற்றும் கீழடுக்கு காற்றின் சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக மதுரை, தேனி, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி தாலுகா ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் இன்றும் பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம் - தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு!