1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. next three days heavy rain in tamil nadu

அடுத்த 3 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கனமழை
தமிழ்நாட்டில் அடுத்த  மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, நீலகிரி, தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஈரோடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு மேகம் வானமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.

Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
குடும்பக்கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு குழந்தை.. மாதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த நீதிமன்றம்..!