வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : புதன், 8 நவம்பர் 2023 (18:38 IST)

டெல்லியில் மீண்டும் மோசமாகும் காற்றின் மாசு.. பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு..!

டெல்லியில் மீண்டும் காற்றின் மாசு மோசமாவதை அடுத்து பள்ளிகளுக்கு மேலும் ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் மாசு காரணமாக நவம்பர் பத்தாம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காற்று மாசுபாடு மீண்டும் தொடர்ந்து வருவதை அடுத்து நவம்பர் 18ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.

 காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளுக்கும் டிசம்பர் மாத குளிர் கால விடுமுறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக டெல்லி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

நவம்பர் 9 முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை  டிசம்பர் மாத குளிர்கால விடுமுறையாக டெல்லி கல்வித்துறை அறிவித்துள்ளது. நவம்பர் 19ஆம் தேதியில் அன்றைய நிலையில் உள்ள காற்றின் மாசு நிலையை பொறுத்து பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

டெல்லியில் மாசு குறைபாடு தடுப்பதற்காக மேலும் சில நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாகவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது

Edited by Siva