திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By ஜெ.துரை
Last Modified: புதன், 8 நவம்பர் 2023 (22:09 IST)

விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம் - தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு!

விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு செய்த தீயணைப்பு துறையினர்.


விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீயணைப்புத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான சுமார் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள்,கோயம்பேடு அங்காடிகளுக்கு வருகை தரும் பொது மக்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள், கோயம்பேடு சுற்றி  அமைந்துள்ள குடிசைபகுதி போன்ற இடங்களில்  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அது மட்டுமின்றி  தீபாவளியை மிகவும் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்றும் பட்டாசு வெடிக்கும் பொழுது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் ஒலிபெருக்கி மூலமும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.