1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Finance minsiter PTR says abot madurai plans

மதுரையில் தொழிற்பூங்கா: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என நிதியமைச்சர் பிடிஆர் பேட்டி!

மதுரை
மதுரையில் தொழில் பூங்கா கொண்டுவந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம் என்று தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கூறியுள்ளார் 
 
மேலும் மதுரையில் மூன்றாவது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு போன்ற வாக்குறுதிகளையும் செயல்படுத்த உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
நிதியமைச்சர் என்ற வகையில் சிறப்பான திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை மதுரை மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கு நான் பெற்றுத்தரும் சாத்தியங்கள் அதிகம் என்று அவர் கூறியுள்ளார் மேலும் மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது, முறையான வகையில் திடமான குப்பை மற்றும் கழிவு நீர் அகற்றல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் வைகை நதியில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் இன்று 2700க்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!