8 போடாமல் லைசென்ஸ்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
டிரைவிங் லைசன்ஸ் எடுக்க வேண்டுமானால் இனிமேல் 8 போட வேண்டிய அவசியமில்லை என்றும், ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றாலே போதும் என்றும் சமீபத்தில் மத்திய அரசு அறிவித்திருந்தது
இந்த அறிவிப்பு விரைவில் பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்திருந்தாலும் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளை இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றால் ஓட்டுனர் உரிமம் பெறலாம் என்ற மத்திய அரசின் சட்டத் திருத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மத்திய மாநில அரசுகள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு விரைவில் வரும் என்பதும், இந்த வழக்கின் முடிவில் தான் 8 போடாம லைசென்ஸ் எடுக்க முடியுமா அல்லது மீண்டும் பழைய முறை பின்பற்றப்படுமா என்பதும் தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.