1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. wife tried to kill her own husband by poision

ரூ.10 லட்சம் கடன்!.. கணவன் காதில் விஷயத்தை ஊற்றிய மனைவி!...

murder
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள புழுதிக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவர் ஒருவரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. ஆனால் பணம் கொடுத்தவர் பணம் கேட்டு நச்சரித்ததாக தெரிகிறது.

இந்நிலையில்தான், தூங்கிக் கொண்டிருந்த ரவிச்சந்திரன் காதில் அவரின் மனைவி உமாராணி விஷத்தை ஊற்றியதாக சொல்லப்படுகிறது. அவருக்கு அவரின் மைத்துனர் ஞானசேகரன் உதவியாக இருந்திருக்கிறார். தற்போது ரவிச்சந்திரன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கணவன் இறந்து விட்டால் 10 லட்சம் ரூபாய் கடனை திருப்பிக் கொடுக்க தேவையில்லை என்பதாலும் கணவரின் பெயரில் உள்ள இன்சூரன்ஸ் பணம் மற்றும் சொத்துக்களை பெறும் ஆசையில்தான் அவரின் மனைவி இந்த செயலை செய்தது பெரிய வந்திருக்கிறது. இதையடுத்து உமாராணி மற்றும் அவரின் மைத்துனர் ஞானசேகரன் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
கட்சியில் சேர்ப்பதற்காக போட்ட கையெழுத்தைவிட நீக்குவதற்கு போட்ட கையெழுத்து அதிகம்: ஈபிஎஸ் குறித்து வேலுமணி ஆதரவாளர்கள்..