1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. c vijaybaskar says more than 200 will join tvk soon

5 முன்னாள் அமைச்சர்கள்!.. 15 எம்.எல்.ஏக்கள்!.. 200 பேருந்தில் வந்து தவெகவில் இணையும் அதிமுகவினர்!...

eps palanisamy
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைந்திருக்கிறது. அதுவும் மாற்றுக் கட்சிகளில் இருந்தும் ஆதரவை பெற்று பெற்றதோடு அந்த கட்சிகளுக்கு அமைச்சரவையிலும் தவெக இடம் கொடுத்திருக்கிறது. இது தமிழக அரசின் புதிய மாற்றத்தையும், திருப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

எனவே தவெகவுக்கு சென்றால் அமைச்சர் பதவி கிடைக்கும் என்கிற நம்பிக்கை பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக், அதிமுக போன்ற கட்சிகள் தவெகவுடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
ஒருபக்கம் ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். அதில் 4 எம்.எல்.ஏக்கள் ஏற்கனவே தவெகவில் இணைந்து விட்டனர். விரைவில் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் விரைவில் தவெகவில் இணையவுள்ளனர்.

மேலும், அதிமுகவிலிருந்து 5 முன்னாள் அமைச்சர்கள், 15 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ,பல மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட பேர் நாளை தவெகவில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த சி.விஜயபாஸ்கர் ‘200க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சுமார் 7 மணி நேரம் பயணித்து தவெகவில் இணைவதற்கு வருவதிலிருந்து தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் மீது எவ்வளவு அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்’ என கூறியிருக்கிறார்..
அடுத்த கட்டுரையில்
பிரபல யூடியூபர் ஐபிடிஎஸ் திருநாவுக்கரசு கைது.. தவெக எம்.எல்.ஏவை விலை பேசினாரா?