தொடர்புடைய செய்திகள்
- ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
- ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
- ஈபிஎஸ்-ஓபிஎஸ் எனக்கு தடையாக உள்ளனர். ஜெ.தீபா
- ஜெயலலிதாவின் கட்டளையே சாசனம்; பாகுபலி வசனம் பேசி உரையை முடித்த ஓபிஎஸ்
- ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்..ஏக்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்: பரபரப்பு தகவல்
ஓபிஎஸ், ஈபிஎஸ் மீது அவதூறு பதிவு: பிரபல ஃபேஸ்புக் பயனாளி கைது
தமிழக ஃபேஸ்புக் பயனாளிகள் பலருக்கு மன்னை சிவா என்பவரை தெரிந்திருக்கும். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது பதிவு செய்து வந்துள்ளார். டிடிவி தினகரனின் ஆதரவாளரான இவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தரக்குறைவாக மன்னை சிவா கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும், இதுகுறித்து சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரும், சுதா என்பவரும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த குற்றப்பிரிவு போலீசார் மன்னை சிவாவை தகவல் தொழில்நுட்பச்சட்டம், பெண் வன்கொடுமை சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
