செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 14 ஜூலை 2018 (13:26 IST)

ஈபிஎஸ்-ஓபிஎஸ் எனக்கு தடையாக உள்ளனர். ஜெ.தீபா

அதிமுகவில் இணைந்து அக்கட்சியை வழிநடத்த தனக்கு விருப்பம் என்றும் ஆனால் அதற்கு ஈபிஎஸ்-ஓபிஎஸ் தடையாக இருப்பதாகவும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 
அதிமுகவில் இணைய தன்னை ஓபிஎஸ் அழைத்தார். ஆனால் அதன்பின்னர் அவர் ஏன் பின்வாங்கினார் என்பது எனக்கு இப்போதுவரை தெரியவில்லை. இந்த விஷயத்தில் ஓபிஎஸ் என்னை ஏமாற்றிவிட்டார் என்றே நினைக்கின்றேன்
 
எனக்கு அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியோ, முதல்வர் பதவியோ தேவையில்லை, அதிமுக தொண்டர்கள் நான் தான் அந்த கட்சியை வழிநடத்த வேண்டும் என்று விரும்புகின்றனர். அந்த விருப்பதை நிறைவேற்ற எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் அதுவே எனக்கு போதும்
 
இவ்வாறு ஜெ.தீபா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.