திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: செவ்வாய், 17 ஜூலை 2018 (07:48 IST)

ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒன்றை திமுக தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து தனது மனைவி மகன்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்களின் பெயர்களில் சொத்துக்களை வைத்துள்ளதாகவும், இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அளித்த புகாரின் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும்  கோரிக்கை விடுத்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டி வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
 
மேலும் இந்த மனுவில் ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு இருக்கும் சொத்துப்பட்டியலையும் ஆர்.எஸ். பாரதி குறிப்பிட்டுள்ளார். கடந்த  2011ஆம் ஆண்டு தேர்தலின்போது ஓபிஎஸ் மனைவிக்கு ரூ.24.20 லட்ச சொத்துகள் இருந்ததாக குறிப்பிட்ட ஓபிஎஸ், 2016ஆம் ஆண்டு தேர்தலின்போது ரூ.78 லட்ச மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது சந்தேகத்தை எழுப்புவதாகவும் ஆர்.எஸ்.பாரதி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது.