தொடர்புடைய செய்திகள்
- வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!
- SIR படிவத்தை முழுமையாக நிரப்பாவிட்டால் நிராகரிக்கப்படுமா? தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்..!
- ஆதார் இருந்தால் ஒருவரை வாக்காளராக சேர்க்க வேண்டுமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி..!
- பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!
- என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி
SIR படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
SIR படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
தமிழகம் உள்பட சில மாநிலங்களில் தற்போது வாக்காளர் சிறப்பு சீர்திருத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த படிவங்களை டிசம்பர் 4ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது மழை உள்பட பல்வேறு காரணங்களால் பூர்த்தி செய்யப்பட்ட SIR படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
மேலும், வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16ஆம் தேதியும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ஆம் தேதியும் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் ஒரு வாரம் நீடிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
