அம்மா ஆசியுடன் தேர்தலில் போட்டியிட ஈபிஎஸ் - ஓபிஎஸ் விருப்ப மனு தாக்கல்!

Sugapriya Prakash| Last Modified புதன், 24 பிப்ரவரி 2021 (10:25 IST)
அம்மா பிறந்தநாளான இன்று சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஈபிஎஸ் - ஓபிஎஸ் விருப்ப மனு தாக்கல். 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் தேதியை இன்று முடிவு செய்ய இருப்பதாக தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
 
இந்நிலையில் அதிமுக ஏற்கனவே தேர்தலுக்காக விருப்ப மனுக்களை பெற துவங்கியுள்ள நிலையில், அம்மா பிறந்தநாளான இன்று சட்டமன்ற தேர்தலில் சேலம் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியும் போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் மீண்டும் போட்டியிட இன்று விருப்பமனு அளிக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :