திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 24 பிப்ரவரி 2021 (06:51 IST)

அதிமுகவையும் தமிழகத்தையும் கண்களென காத்திட சூளுரைப்போம்: ஜெயலலிதா பிறந்த நாளில் சசிகலா கடிதம்

இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை அடுத்து சசிகலா கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியிட்ட கடிதம் ஒன்று மீண்டும் நமது எம்ஜிஆர் இதழில் வந்துள்ளது. அதில் அவர் அதிமுகவையும் தமிழகத்தையும் காத்திட சூளுரைப்போம் என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த கடிதம் தற்போது ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
 
அதிமுகவையும் தமிழகத்தையும் கண்களென காத்திட சூளுரைப்போம்... ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் என்ற முறையில் சசிகலா கடிதம்
ஜெயலலிதா காட்டிய லட்சியப் பாதை விரிந்து கிடக்கிறது. அதில் அதிமுகவின் வெற்றி பயணம் தொடரவேண்டும்.
 
ஜெயலலிதா உயிரோடு இருந்தால் எவ்வாறு உணர்வோமோ அந்த உணர்வோடு அதிமுகவில் தாயின் பரிவை, பாதுகாப்பை தொடர்ந்து இனியும் உணரலாம். வீழ்ந்து கிடக்கும் நம் எதிரிகள், எஃகு கோட்டையில் விரிசல் விடாதா ? தடி ஊன்றியாவது எழுவிட மாட்டோமா என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.
 
ஜெயலலிதாவுடனான 33ஆண்டு பயணத்தை நினைத்தே வாழ்நாளை கழித்துவிடலாம் என இருந்தேன், இருந்தாலும் இந்தியாவின் 3வது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் இருக்கும் அதிமுகவை கீழிறங்கிவிடக்கூடாது என்ற அக்கறை, தொண்டர்களின் கட்டளையால் பொதுவாழ்வு என்ற வேள்வியில் என்னை அர்ப்பணித்துக்கொண்டேன்