தொடர்புடைய செய்திகள்
- அதிமுகவையும் தமிழகத்தையும் கண்களென காத்திட சூளுரைப்போம்: ஜெயலலிதா பிறந்த நாளில் சசிகலா கடிதம்
- திமுக ஆட்சியில் கொடுத்த டிவி "நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு: அமைச்சர் அறிவிப்பு!
- அதிமுக அரசை எதிர்த்து போராட வேண்டாம்: முக ஸ்டாலின் வேண்டுகோள்!
- அமைச்சருடன் பிரசாரத்தில் பங்கேற்ற நடிகர் சிங்கமுத்து
- அதிமுக கூட்டத்தில் காலி சேர்களை படம் பிடித்த நிருபருக்கு அடி உதை - மன்னிப்பு கேட்ட அமைச்சர்!
நோட்டுக்கும் சீட்டுக்கும் கொள்கையை விற்ற ராமதாஸ் - வேல்முருகன் விளாசல்!
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் பாமக நிறுவனர் ராமதாஸ் மீது கடும் விமர்சனம்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் தேதியை இன்று முடிவு செய்ய இருப்பதாக தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ் மீது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழக உரிமைகளை மத்திய அரசுக்கு மாநில அரசு காவு கொடுத்து வருகிறது. வன்னியர்களுக்கு 15% உள் ஒதுக்கீடு கோரி 30 ஆண்டுகளுக்கும் மேலாக 26-க்கும் மேற்பட்ட வன்னியர் சங்கங்கள் போராடி வருகின்றன.
ஆனால் பாமக தலைமைக்கு இவை பற்றியெல்லாம் அக்கறை இல்லை, நோட்டுக்கும் சீட்டுக்கும் தன் கொள்கைகளை அதிமுகவிடம் விற்பனை செய்துள்ளார். தன் கல்வி நிறுவனங்கள் வன்னியர் நல வாரிய சொத்துக்களுடன் சேர்ந்து விடாமல் இருக்கவே ராமதாஸ் பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறார் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
