ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (17:28 IST)

அதிமுக அரசை எதிர்த்து போராட வேண்டாம்: முக ஸ்டாலின் வேண்டுகோள்!

அதிமுக அரசை எதிர்த்து போராட வேண்டாம் என்றும் உங்கள் கோரிக்கைகளை அதிமுக செவி கொடுக்காது என்றும் திமுக ஆட்சி வந்தவுடன் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்
 
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் செய்து வருவதை அடுத்து அவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியபோது தேர்தலுக்காக வழக்குகள் வாபஸ் என ஒருபக்கம் நாடகமாடும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறுபக்கம் கைது கொடுமையை அரங்கேற்றுகிறார்
 
செவிமடுக்காத அதிமுக அரசிடம் உங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட வேண்டாம். திமுக அரசு வந்தவுடன் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் என்று அங்கன்வாடி ஊழியர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேபோல் நாளை மறுநாள் முதல் போராட்டம் செய்ய அறிவிப்பு செய்திருக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் திமுக தலைவர் முக ஸ்டாலின் வாக்குறுதி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்