தொடர்புடைய செய்திகள்
- எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை திருத்த சட்டம்; ”அரசமைப்புக்கு உட்பட்டது தான்”; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- சிறுமியின் திருமணம் செல்லும் – நீதிமன்றத்தின் அதிர்ச்சி தீர்ப்பு !
- செருப்பை கழற்ற சொன்ன அமைச்சர் மீது காவல்நிலையத்தில் புகார்!
- ரஜினிக்கு அறிவுரை கூறிய மு.க.ஸ்டாலின் !
- நித்யானந்தாவின் ஜாமீன் ரத்து – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !
மாணவியை அடைத்து வைத்து 6 நாட்கள் பலாத்காரம் – பொறியியல் மாணவனின் ஆபாச செயல் !
கோப்புப்படம்
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைக்கரை எனும் பகுதியில் 10 ஆவது படிக்கும் மாணவியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள பகுதி அனைக்கரை. அந்த பகுதியைச் சேர்ந்த 15 வயதாகும் பள்ளி மாணவி அதேப் பகுதியைச் சேர்ந்த பொறியியல் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவனுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் தங்கள் வீட்டில் யாரும் இல்லை என சொல்லி அம்மாணவியை தன் வீட்டுக்கு அழைத்துள்ளார் அந்த மாணவன்.
அவனை நம்பி சென்ற மாணவியை 6 நாட்களாக வீட்டிலேயே அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து மாணவியைக் காணாமல் அவரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலிஸார் அந்த மாணவனைக் கைது செய்துள்ளனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவனை நீதிமன்ற உத்தரவுப்படி தஞ்சை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்துள்ளனர்.
