செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (14:14 IST)

ரஜினிக்கு அறிவுரை கூறிய மு.க.ஸ்டாலின் !

ரஜினிக்கு ஸ்டாலின் அறிவுரை
சி.ஏ.ஏவால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து, ஆராய்ந்து பேச வேண்டும் என நடிகர் ரஜினிக்கு, எதிர்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
 
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று காலை  செய்தியாளர்களுக்கு  அளித்த பேட்டியில், ‘சிஏஏ சட்டட்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தை அரசியல் கட்சிகள் ஏற்படுத்தி வருகின்றனர் என்றும், உண்மையில் இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது என்றும், பாகிஸ்தான் பிரிவினையின்போது இதுதான் நமது மண், இதுதான் நமது நாடு என்று முடிவெடுத்த இஸ்லாமியர்களை எப்படி இந்தியா வெளியேற்றும்? என்றும், ஒருசில அரசியல் கட்சிகள் தங்களின் சுயலாபத்திற்காக இதனை கையில் எடுத்துள்ளதாகவும், ஒருவேளை இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் ஏதாவது அச்சுறுத்தல் நடந்தால் முதல் ஆளாக நானே குரல் கொடுப்பேன் என்றும் தெரிவித்தார்.
 
இதற்கு தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாஅத் கட்சி, ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
ஆனால், எதிர்கட்சிகள் ரஜினிக்கு எதிராக விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
இதுகுறித்து, முக ஸ்டாலின் கூறியுள்ளதாவது :
 
சி.ஏ.ஏவால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து, ஆராய்ந்து பேச வேண்டும் ; ரஜினி, சிஏஏ குறித்து தெரிந்து கொண்டால் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார் என தெரிவித்துள்ளார்.