திங்கள், 16 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 15 மார்ச் 2026 (16:51 IST)

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி!.. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!...

election
தமிழகம் முழுக்க 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கவிருக்கிறது.. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

தமிழகத்தை பொறுத்தவரை 30.3.2026 அன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம் எனவும் 06.04.2026 அன்று வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 07.04.2026 அன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறவிருக்கிறது. அதேபோல், வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாள் 9.4.2026 என அறிவிக்கப்பட்டிருக்கிறது..

முக்கியமாக தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 23.04.2026 அன்று நடைபெறவிருக்கிறது. 04.05.2006 வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் தற்போது முதலே தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

5 மாநிலங்களில் 824 தொகுதிகள், 2.19 லட்சம் வாக்குச் சாவடிகள் உள்ளன.. 17.4 கோடி பேர் வாக்களிக்கவுள்ளார்கள்.. தேர்தல் பணியில் 25 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர்.. பாதுகாப்பு பணியில் 8.5 லட்சம் பேர் ஈடுபடவிருக்கிறார்கள் என ஞானோஷ் குமார் தெரிவித்திருக்கிறார்..