தொடர்புடைய செய்திகள்
- எல்லாம் பொய்!.. திமுக - காங்கிரஸ் கூட்டணி நல்லா போகுது!.. பதறிய செல்வப்பெருந்தகை!...
- தமிழக அரசியலில் மெகா திருப்பம்: விஜய்யை சந்தித்த காங்கிரஸ் பிரமுகர்கள்.. உறுதியாகிறது கூட்டணி..!
- போனா போகட்டும்!.. காங்கிரஸ் நமக்கு வேணாம்!... திமுகவில் சலசலப்பு..
- திமுக கூட்டணியில் இழுபறி!.. சென்னை வரும் ராகுல்காந்தி!.. விஜயை சந்திப்பாரா?..
- ஆட்சி அதிகாரத்தில் பங்கு!. விதை விஜய் போட்டது!.. தவெக நிர்வாகி ராஜ்மோகன் பேட்டி!...
காங்கிரஸுக்கு எவ்வளவு தொகுதி?!.. இன்று முடிவு செய்யும் திமுக...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும், 40 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க வேண்டும், 2 ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் கேட்கிறது..
ஆனால் இது எதையுமே கொடுக்க முடியாது என திமுக சொல்கிறது.. சில நாட்களுக்கு முன்பு ஒரு விழாவில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு செட்டாகாது என கூறினார்.. அதேபோல் காங்கிரசுக்கு குறைந்தபட்சம் 22 முதல் 25 சீட் வரை மட்டுமே கொடுக்க திமுக முடிவு செய்திருக்கிறது.. அனேகமாக ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்கலாம் என தெரிகிறது..
ஒருபக்கம் மாணிக்கம் தாகூர் எம்பி, பிரவீன் சக்ரவர்த்தி, கிரிஷ் சோடங்கர் ஆகியோர் தொடர்ந்து ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்கிற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள்.
அதேபோல் காங்கிரஸ் கேட்டதை திமுக கொடுக்கவில்லை என்றால் தவெக பக்கம் செல்லவும் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது..
இந்நிலையில்தான் அறிவாலயத்தில் இன்று காங்கிரஸுடன் தொகுதி பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தையை திமுக நடத்தவிருக்கிறது. கிரிஷ் சோடங்கர், செல்வபெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் குழுவிடம் டி.ஆர் பாலு தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது.. அதில் உடன்பாடு ஏற்பட்டுவிட்டால் திமுக - காங்கிரஸ் கூட்டணி இன்றே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.