ஜனநாயகன் தீர்ப்பு ஒத்திவைப்பு!.. படம் வருமா? வராதா?.. விஜய் ரசிகர்கள் சோகம்!..
ஜனநாயகன் படம் எல்லா பிரச்சனைகளையும் முடித்து எப்போது வெளியாகும் என்பதே விஜய் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த படத்திற்கு முதலில் UA சான்றிதழ் கொடுப்பதாக சொன்ன தணிக்கை வாரியம் 10 நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு திடீரென மறுதணிக்கை என சொன்னதால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. முதலில் தயாரிப்பாளருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. ஆனால் அதை எதிர்த்து தணிக்கை வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.
இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பும் தங்களது வாதங்களை முன் வைத்தன. தணிக்கை வாரியம் சார்பில் சென்சார் செய்யப்படாமல் ரிலீஸ் தேதியை முன்பே அறிவித்தது தவறு.. அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது.. 500 கோடி செலவு செய்திருக்கிறோம் என சொல்லி அழுத்தம் கொடுக்க முடியாது.. தனி நீதிபதியின் உத்தரவுக்கு பதில் அளிக்க அவகாசம் கொடுக்கப்படவில்லை என தணிக்கை வாரியம் சார்பில் சொல்லப்பட்டது.
அதேபோல் தணிக்கை வாரியத்தின் செயல்பாடுகளால் மன உளைச்சல் அடைந்திருக்கிறோம்.. நஷ்டத்தை சந்தித்திருக்கிறோம்.. ரிலீஸ் தேதியை சொல்லாவிட்டால் ஓடிடி நிறுவனம் எங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.. தணிக்கை வாரியம் சொன்ன 14 காட்சிகளையும் நீக்கி விட்டோம்.. ஆனாலும், வேண்டுமென்றே தணிக்கை சான்றிதழை கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள். இந்த வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.
ஆனால் உடனடியாக தீர்ப்பு வழங்க மறுத்த நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். எனவே ஜனநாயகன் தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்போது வெளியாகும் என்பது யாருக்கும் தெரியவில்லை. இது விஜய் ரசிகர்கள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.