தொடர்புடைய செய்திகள்
- 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
- இன்னும் சற்று நேரத்தில் 10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!
- உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்கள்! – 58 பேர் தமிழகம் வந்தனர்!
- யுக்ரேன் தொலைக்காட்சி கோபுரம் மீதான ரஷ்ய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது - யுக்ரேனிய வெளியுறவுத்துறை
- உக்ரைனில் உள்ள குழந்தைகளுக்கு உதவும் பிரபல நடிகை
தேர்வு முடிந்ததுமே பள்ளிகள் திறப்பு! விடுமுறை இல்லை! – அதிர்ச்சியில் மாணவர்கள்!
தமிழகத்தில் 10 முதல் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் மறுதிறப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பொதுத்தேர்வுகள் நேரடியாகவே நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
தேர்வுகள் மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரத்திற்குள் முடிவடையும் நிலையில் கோடை விடுமுறை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே இருந்தது. இந்நிலையில் 2022-23ம் ஆண்டிற்கான கல்வியாண்டில் 11ம் வகுப்பு தவிர அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 13 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24ல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஆண்டுதோறும் பொதுத்தேர்வு முடிந்து ஒரு மாத காலம் விடுமுறை வழங்கப்படும் நிலையில் தற்போது வழங்கப்படாதது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
