வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 9 செப்டம்பர் 2024 (11:34 IST)

மகாவிஷ்ணு விவகாரம்: அறிக்கை தாமதம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

மகாவிஷ்ணு விவகாரம் குறித்து இன்று அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக பள்ளிக்கல்வித்துறையை தெரிவித்திருந்த நிலையில் தற்போது விசாரணை மேலும் நடந்து வருவதால் அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

மகாவிஷ்ணு விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்வதில் இன்று பள்ளிக்கல்வித்துறை ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த விவகாரத்தில் இன்னும் விசாரணை நிறைவு பெறவில்லை என்றும் நாளை வரை தொடர்ந்து விசாரணை நடைபெற இருப்பதை அடுத்து விசாரணை முடிந்த பின்னர் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு அளித்து வரும் நிலையில் தலைமை ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கு முன்னர் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் தென் சென்னை மாவட்ட கல்வி அதிகாரிகளை விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதன் பின்னர் தான் இடமாற்ற நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று அமைச்சர் பள்ளி கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்திக்கவும் தலைமை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Edited by Siva