1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (09:46 IST)

ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்கு! போலீஸ் அதிரடி நடவடிக்கை!

Maha Vishnu

சமீபத்தில் பள்ளி ஒன்றில் மூடநம்பிக்கை விஷயங்களை பேசியதாக வைரலான மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளியில் சமீபத்தில் ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு என்பவர் பேசிய வீடியோக்கள் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. மாணவர்களிடையே மூடநம்பிக்கைகள் விதைப்பதாக அவரை ஒரு ஆசிரியர் தட்டிக்கேட்ட வீடியோவும் வைரலானது.

 

இந்நிலையில் மாற்றுத்திறனாளி ஆசிரியரை தரக்குறைவாக நடத்தியது குறித்து மாற்றுத்திறனாளிகள் சங்கம் மகாவிஷ்ணு மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆஸ்திரேலியா சென்றிருந்த மகாவிஷ்ணு நேற்று சென்னை வந்தடைந்த நிலையில் அவரை சைதாப்பேட்டை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நீதி இயக்கத் தலைவர் சரவணன் என்பவர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் அளித்த மற்றொரு புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K