1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (09:59 IST)

மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம்: 2 தலைமை ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு

மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரத்தில் 2 தலைமை ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு தலைமை ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரத்தில் 2 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட  நிலையில் மகா விஷ்ணுவை பேச அனுமதி அளித்த கல்வித்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு நிகழ்ச்சியை நடத்த அனுமதித்த அதிகாரி யார் என விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ள  தலைமை ஆசிரியர் சங்கம், இதுகுறித்த நடவடிக்கை எடுக்கும் வரை பணியிட மாற்றத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் மோட்டிவேஷன் ஸ்பீச் பேசிய நிலையில் அவரது கருத்து சர்ச்சைக்குள்ளாகி இருப்பதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் பேசிய பள்ளியின் இரண்டு தலைமை ஆசிரியர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva