ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2024 (09:15 IST)

மகா விஷ்ணுவின் சர்ச்சை வீடியோ யூட்யூபில் இருந்து நீக்கம்! - மன்னிப்பு கேட்பாரா?

Maha Vishnu Arrest

சென்னை அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய மூடநம்பிக்கை கருத்துகளை பேசியதாக மகாவிஷ்ணு என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் பேசிய வீடியோக்கள் யூட்யூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

 

 

பரம்பொருள் அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர் சமீபத்தில் சென்னையில் உள்ள அசோக் நகர், சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் மூடநம்பிக்கை கருத்துகளை பேசியதும், அப்பள்ளி ஆசிரியரை அவமதித்து பேசியதும் சமூக வலைதளங்களில் வைரலானது.

 

அதை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியா சென்று திரும்பிய மகாவிஷ்ணு சென்னை போலீஸாரால் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இந்நிலையில் சென்னை அரசு பள்ளி நிகழ்ச்சியை தனது யூட்யூபில் பதிவேற்றியிருந்த பரம்பொருள் அமைப்பு அதை நீக்கியுள்ளது. விரைவில் மகாவிஷ்ணு நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள நிலையில், அவர் இதுகுறித்து மன்னிப்பு கேட்க உள்ளதாகவும், அதனாலேயே வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K