திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 டிசம்பர் 2022 (14:10 IST)

பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு உண்டு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

பொங்கல் தொகுப்பில் கரும்பு இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில் முழு கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. 2023 பொங்கலுக்கு இலவச பச்சரிசி, சர்க்கரையுடன் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படாதது குறித்து எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலரும் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசுத்தொகுப்பில் முழு கரும்பு ஒன்றும் வழங்கப்படும் என தற்போது அறிவித்துள்ளார். பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஜனவரி 9ம் தேதி சென்னை முதல்வரால் தொடங்கப்பட உள்ளது.

Edit By Prasanth.K