தொடர்புடைய செய்திகள்
- சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த கம்யூனிஸ்ட் கட்சி: அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்.
- எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைய வேண்டும்..! இபிஎஸ் உள்ளிட்ட பேருக்கு புகழேந்தி கடிதம்..!!
- அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்..
- கட்சியை கைப்பற்றுவதை விட காப்பாற்றுவது முக்கியம்.. அத நீங்க சொல்லாதீங்க! – OPS vs EPS வார்த்தை மோதல்!
- அதிமுக இடத்தை வருங்காலத்தில் பாஜக பிடிக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு..!
திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி.. கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்குதல் குறித்து ஈபிஎஸ்..!
நேற்று சாதி மறுப்பு திருமணம் நெல்லை கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் செய்து வைக்கப்பட்ட நிலையில் ஒரு குறிப்பிட்ட ஜாதி பிரிவினர் மற்றும் பெண் வீட்டார் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனம்.
தேசிய கட்சி அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியின் அலுவலகம் தாக்கப்படுவது என்பதே இந்த விடியா திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி.
சுயமரியாதை இயக்கம் தழைத்தோங்கிய தமிழ்நாட்டில், இன்றளவும் ஜாதிய தீண்டாமையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது.
நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தைத் தாக்கியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
