வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 13 ஜூன் 2024 (15:37 IST)

அதிமுக இடத்தை வருங்காலத்தில் பாஜக பிடிக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு..!

அதிமுக இடத்தை வருங்காலத்தில் பாஜக பிடிக்கும் என்றும் பாஜக உள்ளே நுழையக்கூடாது என்று கூறும் கட்சிகள் இதை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசியல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கூறி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
பாஜக தென்னிந்தியாவில் வேகமாக வளரும் என்று நான் இரண்டு வருடங்களுக்கு முன்பே கூறினேன், அதுதான் தற்போது நடந்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பாஜக நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளது, ஒரிசாவிலும் வளர்ந்துள்ளது, கேரளாவின் ஒரு எம்பி பெரும் அளவுக்கு பாஜக வளர்ந்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் இரண்டு திராவிட கட்சிகள் இருப்பதால் அந்த கட்சிகளை மீறி வளர்வது என்பது ஒரு நீண்ட கால பயணம். ஆனாலும் தமிழ்நாட்டில் பாஜக இரட்டை இலக்கங்களில் வாக்கு சதவீதம் பெற்றுள்ளது. வருங்காலத்தில் அதிமுக இடத்தை பாஜக பிடிக்கலாம், அதிமுக பெரும் அளவில் பின்னடைவு ஏற்படலாம் என்று பிரசாந்த் கிஷோ கூறியுள்ளார். 
 
பாஜகவுக்கு தமிழ்நாட்டின் 11 % வாக்குகள் கிடைத்திருப்பது சாதாரண விஷயம் இல்லை என்றும் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் புறந்தள்ளி விடக்கூடாது என்று இந்த விஷயத்தை நான் திமுகவில் உள்ள எனது நண்பர்களிடம் சொல்லி இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran