1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 24 மார்ச் 2021 (10:24 IST)

ஈபிஎஸ் தொகுதியில் ஓபிஎஸ்... ஆலோசனையில் நடந்தது என்ன?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்திற்காக கரூர் புறப்படுவதற்கு முன்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆலோசனையில் ஈடுப்பட்டார். 

 
இன்னும் சில நாட்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஓயாமல் ஈடுப்பட்டு வருகின்றனர். தங்களது கட்சிக்காக மட்டும் அல்லாமல் தங்களுடன் உள்ள கூட்டணி கட்சிகளையும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இன்று அதிமுக சார்பில் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். 
 
இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் இருந்து பிரச்சாரத்திற்காக கரூர் புறப்படுவதற்கு முன்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆலோசனையில் ஈடுப்பட்டார். பிரச்சார சுற்றுப்பயணம் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின்றன.