50 காசு நாணயம் செல்லுமா? இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம்..!
அன்றாட பயன்பாட்டிலிருந்து பெரும்பாலும் மறைந்துவிட்ட 50 காசு நாணயம் இன்னமும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரூ.10 நாணயத்தையே ஏற்க வர்த்தகர்கள் தயக்கம் காட்டும் நிலையில், 50 காசு நாணயத்தை ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக புழக்கத்திலிருந்து நீக்கவில்லை என்பதால், அதன் சட்டப்பூர்வமான மதிப்பு குறையவில்லை. இருந்தபோதிலும், வியாபாரிகள் மத்தியில் நிலவும் குழப்பம் காரணமாக, 50 காசு நாணயத்தை வாங்குவோர் இல்லை. இதனால் மக்கள், 50 காசு மதிப்புள்ள பொருளை ஒரு ரூபாய் கொடுத்து இரண்டு பொருளாக வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட விளக்கத்தின்படி, 50 காசு, ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, மற்றும் ரூ.20 மதிப்புள்ள நாணயங்கள் அனைத்தும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும்.
நாணயங்கள் குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், பொதுமக்கள் தயக்கமின்றி அனைத்து நாணயங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறுந்தகவல்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் ரிசர்வ் வங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
Edited by Mahendran