திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 டிசம்பர் 2025 (12:15 IST)

மக்களவையில் SIR விவாதம்.. நாளை ராகுல் காந்தி பேச்சில் அனல் பறக்குமா?

மக்களவையில் SIR விவாதம்.. நாளை ராகுல் காந்தி பேச்சில் அனல் பறக்குமா?
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் முக்கிய பிரச்சினையாக எழுப்பப்பட்டு வந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) தொடர்பான விவாதம், நாளை மக்களவையில் நடைபெற உள்ளது. 
 
குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, இதுகுறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
 
இந்த 10 மணி நேர விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைக்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் புதன்கிழமை பதிலளித்து பேசுவார்.
 
இந்த விவாதத்தின்போது, ராகுல் காந்தி சமீபத்தில் மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநில தேர்தல்களில் நடந்ததாக குற்றம் சாட்டியுள்ள வாக்குத்திருட்டு விவகாரங்கள் மற்றும் எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் பலி உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளை எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
காங்கிரஸின் முக்கிய எம்.பி.க்கள் பலரும் விவாதத்தில் பங்கேற்க உள்ளனர்.
 
Edited by Mahendran