1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (23:14 IST)

கே.ஜி.எஃப்- 2 படத்தின் முக்கிய அப்டேட்..வைரலாகும் புகைப்படம்

கன்னட நடிகர் யாஷ்நடிப்பில் உருவாகியுள்ள கேஜிஎஃப் -2 திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை டிரீம் வாரியஸ் நிறுவனம் பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடுத்து வசூலை வாரிக்குவித்த படம் கேஜிஎஃப். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது.

இந்நிலையில் கேஜிஎப் படத்தின் இரண்டம் பாகம் கேஜிஎஃப் சேப்டர் -2 என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பல கோரி பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இப்படம் வரும் ஜூலை மாதம் 16 ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை பிரபல டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. சுமார் 120 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் வேலைகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் இதில் யாஷ் சிறப்பாகப் பேசியுள்ளதாகவும் இப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார்.