1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 24 மார்ச் 2021 (10:03 IST)

நடைய கட்டுங்கடா... ஓபிஎஸ் பேச்சை கேட்காமல் கலைந்த கூட்டம்!

ஓ.பன்னீர்செல்வம் பேசிக்கொண்டிருந்த போதே பொது மக்கள் கலைந்து சென்றது திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
இன்னும் சில நாட்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஓயாமல் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திருப்பூர் யூனியன் மில் சாலையில் அதிமுக சார்பில் திருப்பூர் வடக்கு, தெற்கு காங்கேயம் மற்றும் பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார்.
 
அப்போது அவர் பேசிக்கொண்டிருந்த போதே கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் கலைந்து செல்ல ஆரம்பித்தனர். இதனால் மேடையிலிருந்த அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.