தொடர்புடைய செய்திகள்
- அமைச்சர் பொன்முடி கைது இல்லை.. ஆனால் இன்று ஆஜராக உத்தரவு.. அமலாக்கத்துறை அதிரடி..!
- அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக அழைத்துச் சென்ற அமலாக்கத்துறையினர்
- முத்துசாமி அவர்கள் ஊடகங்களில் கொடுத்த விளக்கம் கண்டு மிகுந்த வருத்தப்படுகிறேன்-அண்ணாமலை
- பொன்முடி வீட்டை அடுத்து தனியார் மருத்துவமனையில் அமலாக்கத் துறையினர் சோதனை..!
- அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை.. அன்றே சொன்னார் அண்ணாமலை..!
அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை: ரூ.41.9 கோடி வைப்புத்தொகை முடக்கம் என தகவல்..!
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் இந்த சோதனையின் முடிவில் ரூபாய் 41.9 கோடி வாய்ப்பு தொகை முடக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று விடிய விடிய சோதனை நடந்த நிலையில் இன்று அவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
அதனை அடுத்தவர் அதிகாலை விசாரணை முடிந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார் இந்த நிலையில் இந்தோனேசியா நிறுவனத்திற்கு ரூ.100 கோடி அனுப்பப்பட்டதாக அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளதாகவும் வைப்புத்தொகை தவிர பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை என்னும் பணி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த சோதனையில் 41.9 கோடி ரூபாய் மதிப்பு வைப்புத்தொகை முடக்கம் செய்யப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை விசாரணையில் ரூபாய் 48 கோடி வருவாய் வந்தது எப்படி என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Edited by Siva
