தொடர்புடைய செய்திகள்
- அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை.. அன்றே சொன்னார் அண்ணாமலை..!
- அமைச்சர் பொன்முடி இல்லத்தில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு கரன்சி? பரபரப்பு தகவல்..!
- அமைச்சர் பொன்முடி வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் வருகை: பணப் பரிவர்த்தனை குறித்து விசாரணையா?
- போலி சாவி தயாரித்து பீரோவை திறந்தார்களா அமலாக்கத்துறை அதிகாரிகள்.. பொன்முடி வீட்டில் பரபரப்பு..!
- அமலாக்கத்துறை சோதனை பற்றி திமுக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பொன்முடி வீட்டை அடுத்து தனியார் மருத்துவமனையில் அமலாக்கத் துறையினர் சோதனை..!
அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் இரு தொடர்பாக சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது
ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை செய்த பின்னர் அவரை கைது செய்தனர் என்பது தெரிந்ததே. இன்று அவர் தனியார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த நிலையில் மற்றொரு அமைச்சரான பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் வங்கி அதிகாரிகள் அழைக்கப்பட்டு பண பரிவர்த்தனை குறித்து விசாரணை செய்யப்பட்டது
அது மட்டும் இன்றி பொன்முடியின் வீட்டிற்கு இந்தியன் வங்கியின் நகை மதிப்பீட்டாளர்கள் இரண்டு பேர் வருகை தந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் அமலாக்கத்துறையினர் பொன்முடி விவகாரம் குறித்து சோதனை செய்து வருவதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran
